நத்தம் பேரூராட்சியில் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு – அமைச்சர் அறிவிப்பு!!

0
Lock
Lock

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று முதல் வரும் ஜூலை 20ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் வேலுமணி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை 1,26,581 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்புகளும் குறிப்பிட்ட அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆரம்ப காலத்தில் சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது பிற மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை உட்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று முதல் ஜூலை 20ம் தேதி வரை 10 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

அதிமுக.,வில் சசிகலாவிற்கு இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள அமைச்சர் வேலுமணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி & கிராமப் பகுதிகளில் #COVID19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11 முதல் ஜூலை 20 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பால் & மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும். இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here