ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்..!

0

மத்தியபிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

சூரிய மின்சக்தி திட்டம்..!

மாதித்யபிரதேச மாநிலத்தில் ரேவா என்ற இடத்தில் 1,500 ஹெக்டேரில் 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டம் அமைக்கப்பட்டது. இந்த சூரிய மின்சக்தி திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார்.

அன்னை நர்மதா மற்றும் வெள்ளைப்புளியின் அடையாளத்தை கொண்டு ரேவா நகரம் அறியப்பட்டது. ரேவா நகரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டமும், அதன் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது வரலாற்று சாதனையாகும். அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டம் இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு பயன்படும் எனவும் டில்லி மெட்ரோ ரயிலும் பலனடையும். மேலும் ஷனாபுர், நீமூச், சதார்பூர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதிமுக.,வில் சசிகலாவிற்கு இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

இதையடுத்து சூரிய தகடுகள் அதனுடன் தொடர்புடைய சாதனங்களுக்கு பிற நாடுகளை சார்ந்திருப்பதை நாம் குறைப்பதற்கான பணிகளை துவக்க வேண்டும். சோலார் உபகரணங்கள் மற்றும் பேட்டரிகள் இந்தியாவில் தயாரிப்பதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் மின்சார தேவையும் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here