டிஜிட்டல் வாக்காளர் அட்டை – பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள்!!

0

பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் தற்போது டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை யார் பெற்றுக்கொள்ளமுடியும், எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது பற்றி தற்போது கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வாக்காளர் அட்டை

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் கடந்த 25 ம் தேதி டிஜிட்டல் வாக்காளர் அட்டை என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த சேவை மூலம் மக்கள் எலக்ட்ரானிக் வாக்காளர் அட்டையை டிஜிட்டல் முறையில் இணையதளத்திலிருந்து பதிவு செய்ய முடியும். இதன்மூலம் வாக்காளர் அட்டையை டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளமுடியும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

டிஜிட்டல் வாக்காளர் திட்டத்தை பயன்படுத்த இணையசேவை கொண்ட கணிப்பொறி அல்லது ஸ்மார்ட் போன் கொண்டு செயல்படுத்த முடியும். டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பெற்று கொள்ள https://voterportal.eci.gov.in/ அல்லது https://nvsp.in/Account/Login என்ற இணையதளத்தில் லாகின் செய்துகொள்ளவேண்டும். இந்த தளத்தில் கணக்கு இல்லாதவர்கள் இ மெயில் மற்றும் மொபைல் எண்ணை கொண்டு முதலில் ஒரு கணக்கு துவங்க வேண்டும். கணக்கை துவங்கி லாகின் செய்தவுடன் டவுன்லோட் E-EPIC என்ற ஆப்ஃசனை கிளிக் செய்ய வேண்டும். இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டை தேசிய வாக்காளர் தினமான 25 ம் தேதி காலை 11.14 மணி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அறிவித்துள்ளபடி முதல் கட்டமாக இந்த சேவை புதிதாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது. இணையதளத்தில் மொபைல் நம்பருடன் பதிவு செய்துள்ள வாக்காளர்கள் வரும் 25 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். தேர்தல் ஆணையத்திடம் மொபைல் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக உங்களது தரவுகளை திருத்தி தேர்தல் ஆணையத்துடன் மொபைல் எண்ணை இணைத்து வாக்காளர் அட்டையை பெற்று கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப்படும் வாக்காளர் அட்டை pdf வடிவத்தில் இருக்கும். இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டையில் QR கோர்டு இருக்கும். இந்த கோர்டில் வாக்காளரின் பெயர், தகவல் மற்றும் அவருடைய முகவரி இடம்பெற்றிருக்கும். இந்த டிஜிட்டல் வாக்காளர் அட்டை பாதுகாப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்கு அட்டையை அரசின் டிஜிலாக்கர் சேவையில் வைத்து பாதுகாக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here