ஆவி பறக்க இட்லி தோசைக்கு தக்காளி இல்லாமல் இந்த சட்னிகளை செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!

0
ஆவி பறக்க இட்லி தோசைக்கு தக்காளி இல்லாமல் இந்த சட்னிகளை செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!
ஆவி பறக்க இட்லி தோசைக்கு தக்காளி இல்லாமல் இந்த சட்னிகளை செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!

பொதுவாக இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னிகளை தான் நாம் செய்து வருகிறோம். ஆனால் தற்போது சில நேரங்களில் தக்காளியின் விலை அதிகரித்து விடுகிறது. இதனால் தக்காளி இல்லாமல் 2 வகையான சட்னி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

கொத்தமல்லி சட்னி;

தேவையான பொருட்கள்;

  • உளுந்து – 1 டீஸ்பூன்
  • குழம்பு கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 8
  • பூண்டு – 4
  • பச்சை மிளகாய் – 3
  • பட்டை வத்தல் – 3
  • புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை – 2 கைப்பிடி
  • தேங்காய் – 50 கிராம்

செய்முறை விளக்கம்;

இந்த சட்னி தயாரிப்பதற்கு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். மேலும் அதோடு சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய், வர மிளகாய், சிறிதளவு புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்போது இதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேங்காய் போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்துக் கொள்ளவும்.

வதக்கி அரைத்த தேங்காய் சட்னி;

தேவையான பொருட்கள்;

  • பெரிய வெங்காயம் நறுக்கியது – 1
  • உளுந்து – 1 டீஸ்பூன்
  • குழம்பு கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1/ 4 டீஸ்பூன்
  • இஞ்சி – சிறிதளவு
  • வரமிளகாய் – 4
  • துருவிய தேங்காய் – 1/ 2 கப்

செய்முறை விளக்கம்;

இந்த சட்னி தயாரிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மேலும் அதில் பெரிய வெங்காயம் மற்றும் சிறிதளவு இஞ்சி, 5 வரமிளகாய் போட்டு கொள்ளவும்.

கனமழை மற்றும் நிலச்சரிவால் ரூ.10,000 கோடி இழப்பு., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட ஹிமாச்சல் முதல்வர்!!!

இப்போது வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு, அதில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து ஒரு 5 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். இதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மேலும் ஒரு கடாயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here