சிக்கன் சுவையை மிஞ்சும் சுறா மீன் கிரேவி.., வீக் எண்டுல ட்ரை பண்ணி பாருங்க!!

0
சிக்கன் சுவையை மிஞ்சும் சுறா மீன் கிரேவி.., வீக் எண்டுல ட்ரை பண்ணி பாருங்க!!
சிக்கன் சுவையை மிஞ்சும் சுறா மீன் கிரேவி.., வீக் எண்டுல ட்ரை பண்ணி பாருங்க!!

NON-VEG வகைகளில் ஒன்றான மீன் நாம் எல்லோருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று தான். இதில் கொஞ்சம் வித்தியாசமாக சுறா மீனை வைத்து கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சுறா மீன் – 1 கிலோ
  • தக்காளி – 3
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்

சுறா மீன் கிரேவி செய்வதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் சிறிதளவு வெந்தயம் போட்டு பொரிய விடவும். பின் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி விடவும். அடுத்ததாக மிளகாய் தூள் ,மல்லி தூள், மஞ்சள் தூள், சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி விடவும்.

 

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்து மசால் கலவையுடன் சேர்த்து கொள்ளவும். இத்துடன் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு வேக விடவும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை கிள்ளி மீன் கிரேவியில் போட்டு அடுப்பை ஆப் செய்யவும். பின் இந்த சுவையான சுறா மீன் கிரேவியை வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here