செட்டிநாட்டு ஸ்டைல முட்டை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.., அம்புட்டு ருசியா இருக்கும்.., மிச்சமே இருக்காது!!!

0
செட்டிநாட்டு ஸ்டைல முட்டை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.., அம்புட்டு ருசியா இருக்கும்.., மிச்சமே இருக்காது!!!
செட்டிநாட்டு ஸ்டைல முட்டை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.., அம்புட்டு ருசியா இருக்கும்.., மிச்சமே இருக்காது!!!

உடலுக்கு புரத சத்தை கொடுக்கும் முட்டையை வைத்து சுவையான செட்டிநாடு ஸ்டைலில் முட்டை கிரேவி ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
  • முட்டை – 5
  • தக்காளி – 3
  • பச்சை மிளகாய் -3
  • சின்ன வெங்காயம் – 5
  • பட்டை, கிராம், ஏலக்காய், சோம்பு – 25 கிராம்
  • தயிர் – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – 4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 2

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

செய்முறை விளக்கம்

செட்டிநாடு முட்டை கிரேவி செய்வதற்கு முதலில் 5 முட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் 5 சின்ன வெங்காயம், தக்காளி, தயிர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம், ஏலக்காய் சேர்த்து நன்றாக பொரிய விடவும். இப்பொழுது நாம் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை இத்துடன் சேர்த்து வதக்கி விடவும்.

பின் மிக்ஸியில் நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்டை சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் நாம் வேக வைத்துள்ள முட்டையை கிரேவியில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அதன் பிறகு கொத்தமல்லி இலைகளை கிள்ளி கிரேவியில் சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும் . இப்போது நமக்கு சுவையான செட்டிநாடு முட்டை கிரேவி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here