ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்ய இனி அலைய தேவையில்லை.., 5 நிமிடங்கள் போதும்.., எளிய வழிமுறைகள் இதோ!!

0
ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்ய இனி அலைய தேவையில்லை.., 5 நிமிடங்கள் போதும்.., எளிய வழிமுறைகள் இதோ!!
ஆதார் கார்டில் திருத்தங்கள் செய்ய இனி அலைய தேவையில்லை.., 5 நிமிடங்கள் போதும்.., எளிய வழிமுறைகள் இதோ!!

ஆதார் அட்டையில் உள்ள பெயர், பாலினம் மற்றும் முகவரி போன்ற விவரங்களை மாற்றுவதற்கான, எளிய வழிமுறைகள் கீழே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

எளிய மாற்றம்:

ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க தனித்துவமிக்க ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டில் ஏதேனும் விவரங்கள் தவறாக, பதிவிட்டிருந்தால் அதை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், இ சேவை மையம், அஞ்சல் அலுவலகம் போன்ற அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அணுகி திருத்திக் கொள்ளலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை ஆன்லைனில் எப்படி எளிய முறையில் செய்வது என்பதை கீழே பார்க்கலாம். முதலில், https://uidai.gov.in/en/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, உள்நுழை என்பதை கிளிக் செய்யவும். பின் 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்சா ஆகியவற்றை உள்ளிட்டு Send Otp என்பதை கொடுக்கவும். பின் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யை உள்ளீடு செய்யவும்.

பின்னர் “ஆன்லைனில் ஆதார் புதுப்பி” என்பதை கிளிக் செய்து, ஆதார் அட்டையில் பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் முகவரி ஆகியவற்றில் எதில் திருத்தம் செய்ய வேண்டுமோ? அதை தேர்ந்தெடுத்து “ஆதாரை புதுப்பிக்க தொடரவும்” என்பதை கிளிக் செய்யவும். திருத்த வேண்டிய சரியான விவரங்களை உள்ளிட்டு, அதன் பிறகு இதற்குத் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும்.

கொரோனா எதிரொலி.., விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடு.., சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இவை அனைத்தும் முடிக்கப்பட்ட பின் 90 நாட்கள் கழித்து, திருத்தப்பட்ட புதிய ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது போக, அரசு அங்கீகாரம் பெற்ற இடங்களில் மேற்குறிப்பிட்ட விவரங்களை கொடுத்து , கைரேகை, கருவிழி போன்ற பயோமெட்ரிக் தரவுகளையும் பதிவேற்றி ஆதாரை ஆஃப் லைனிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here