சுவையில் ஆளை மயக்கும் க்ரீன் சிக்கன்.., செஞ்சு பாருங்க மிச்சமே இருக்காது!!

0
சுவையில் ஆளை மயக்கும் க்ரீன் சிக்கன்.., செஞ்சு பாருங்க மிச்சமே இருக்காது!!
சுவையில் ஆளை மயக்கும் க்ரீன் சிக்கன்.., செஞ்சு பாருங்க மிச்சமே இருக்காது!!

மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சிக்கனில் புது விதமாக க்ரீன் சிக்கன் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1/2 கிலோ
  • புதினா கொத்தமல்லி இலைகள் – 100 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 5
  • மல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • பட்டர் – 1 டீஸ்பூன்
  • பட்டை கிராம்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்;

கிரீன் சிக்கன் ரெசிபி செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லி இலைகளை நன்றாக அலசி ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். அத்துடன் 5 பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதோடு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி விடவும். பிறகு அதில் நாம் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட்டை கடாயில் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் நாம் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வேக வைக்கவும். இறுதியில் பட்டர் சேர்த்து கடாயை மூடி விடவும். பின் ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான கிரீன் சிக்கன் ரெடி ஆகிவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here