நியூ ஸ்டைலில் தேங்காய் பால் சிக்கன் ரெசிபி.., இந்த டேஸ்ட்ல செஞ்சு பாருங்க.., நாக்குல அறுசுவை நடனமாடும்!!

0
நியூ ஸ்டைலில் தேங்காய் பால் சிக்கன் ரெசிபி.., இந்த டேஸ்ட்ல செஞ்சு பாருங்க.., நாக்குல அறுசுவை நடனமாடும்!!
நியூ ஸ்டைலில் தேங்காய் பால் சிக்கன் ரெசிபி.., இந்த டேஸ்ட்ல செஞ்சு பாருங்க.., நாக்குல அறுசுவை நடனமாடும்!!

அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று தான் சிக்கன். இந்த சிக்கனை வைத்து சுவையாகவும், கொஞ்சம் வித்தியாசமான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • சிக்கன்- 1/2 கிலோ
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • தக்காளி – 2
  • சின்ன வெங்காயம் – 5
  • கபாப் சிக்கன் கிரேவி மசாலா தூள் – 100 கிராம்
  • தேங்காய் பால் – 1 கப்
  • கொத்தமல்லி இலைகள் -சிறிதளவு
  • பட்டை கிராம் – சிறிதளவு
  • எண்ணெய் – 50 மில்லி கிராம்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

செய்முறை விளக்கம்

தேங்காய் பால் சிக்கன் கிரேவியை செய்வதற்கு ஒரு கடாயை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம், ஏலக்காய் சேர்த்து அத்துடன் நாம் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதன் பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

அதன் பிறகு 100 கிராம் அளவிற்கு கபாப் சிக்கன் கிரேவி மசாலா பொடி, சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின் ஒரு முழு தேங்காயில் இருந்து தேங்கா பாலை தனியாக எடுத்துக் வதக்கி வைத்துள்ள சிக்கனில் சேர்த்து கிளறி விடவும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான தேங்காய் பால் சிக்கன் கிரேவி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here