விஜய் சேதுபதியின் “Merry Christmas” திரைப்படம் .., வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

0
விஜய் சேதுபதியின்
விஜய் சேதுபதியின் "Merry Christmas" திரைப்படம் .., வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவான ‘Merry Christmas’ படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

Merry Christmas:

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் அவருடைய கேரக்டர் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. அதே போல் ஜவான், விடுதலை போன்ற படங்களில் வில்லனாக கலக்கி வருகிறார். அதுமட்டுமின்றி அண்மையில் வெளியான DSP திரைப்படம் மண்ணை கவ்வியது. இதனால் இவரின் அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கோலிவுட்டில் அசத்தி வந்த விஜய் சேதுபதி தற்போது டோலிவுட், பாலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் இவர் நடித்த ‘Merry Christmas’ திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சேர்ந்து மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவான இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.

இதுவரை திரைக்கு காட்டாத வடிவேலுவின் சொந்த மனைவி இவங்க தான்.., புகைப்படம் உள்ளே!

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை Tips Films & Music தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதற்கு கேப்ஷனாக, இந்த கிறிஸ்துமஸில் படத்தை வெளியிட நினைத்தோம்… ஆனால் ஒரு ட்விஸ்ட் உள்ளது. அதனால் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here