11 வருடங்களுக்கு எமோஷனலான தனுஷ்.., மனைவியால் கிடைத்த அந்த சந்தோஷம் -அவரே வெளியிட்ட பதிவு!!

0

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருபவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து தனுஷின் கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக கண்டிப்பாக 3 திரைப்படம் இருக்கும். தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012 ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 3 திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அப்போது கிடைத்த வரவேற்பு தற்போது கிடைத்து வருகிறது.இது குறித்து நடிகர் தனுஷ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “3 ரீ ரிலீஸ் ரெஸ்பான்ஸை பார்த்து ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டேன். அனைவருக்கும் எனது நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இவரும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here