ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட “குக் வித் கோமாளி” தர்ஷா – காரணம் என்னனு தெரியுமா??

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை தர்ஷா லைவ் செய்யும் போது தான் செய்த தவறுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு வேண்டியுள்ளார்.

“குக் வித் கோமாளி” தர்ஷா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான், நடிகர் தர்ஷா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் துறையில் அறிமுகமானார். இவர் சின்னத்துறையில் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார்.

‘இதெல்லாம் பண்ணி என்ன பிரயோஜனம், அதன் ஒன்னும் இல்லையே’ – மீண்டும் கிண்டலுக்கு ஆளான கீர்த்தி!!

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “முள்ளும் மலரும்” என்ற சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின், இவர் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக தனக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார். இப்படியாக இருக்க, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு லைவ் செய்துள்ளார். அப்போது முஸ்லீம் மதத்தினர் தொழும் அசான் ஒளி கேட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை தர்ஷா கவனிக்காமல் அப்படியே லைவ் செய்துள்ளார். இதனால் பலரும் அவர் முஸ்லீம் மதத்தினரின் உணர்வுகளை மதிக்கவில்லை என்று சிலர் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தர்ஷா தற்போது மன்னிப்பு கேட்டு ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறும் போது தனக்கு அனைத்து மதத்தினரின் உணர்வுகளும் ஒன்று தான் என்றும், தான் அதனை வேண்டும் என்று செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவர் லைவ் செய்யும் போது அது வேறு ஒரு சத்தம் என்று தான் நினைத்தாராம். இதனை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here