‘எதுவா இருந்தாலும் ‘வலிமை’ படத்துக்கு அப்பறம் தான்’ – அஜித்தே வெளியிட்ட செய்தி!!

0

தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் பற்றி ரசிகர்கள் பலரும் கேட்டுக்கொண்டு வந்த நிலையில் தற்போது ‘தல 61’ படத்தை பற்றி அஜித்தே தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தல 61 அப்டேட்

அமராவதி படத்தின் மூலம் என்று கொடுத்து தற்போது வலிமை படம் வரை பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பை பெற்று வருபவர் தல அஜித். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தொடர்ந்து போராடி தற்போது நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் ஏற்று நடித்து அதில் தன்னை நிரூபிப்பவர் தான் அஜித். எளிமை, அடக்கம் என இந்த குணங்கள் தான் ரசிகர்களை அவருக்கு பிடிக்க வைத்தது. எந்த வித ஆரவாரமும் இல்லாமல் தான் பெரிய பிரபலம் என்ற ஆணவமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அதே நேரம் ஏழைகளுக்கு உதவி செய்வதிலும் வல்லவர் என்று தான் சொல்ல வேண்டும்.

ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட “குக் வித் கோமாளி” தர்ஷா – காரணம் என்னனு தெரியுமா??

தல படம் வெளியானாலே அது மாஸ் தான். அப்படி இருக்க அவரின் வலிமை படத்திற்காக ரசிகர்கள் பலரும் காத்து கொண்டுள்ளனர். போனி கபூர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற வெற்றி படத்தை இயக்கிய எச்.வினோத் தான் வலிமை படத்தையும் இயக்குகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வலிமை படத்திற்கு அடுத்து அஜித்தை வைத்து இவர் தான் இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அஜித் அதற்கு பதிலளித்துள்ளார். அதாவது வலிமை படம் முழுவதாக முடியும் வரை எந்த படத்திற்கும் நான் ஒத்துக்கொள்ள வில்லை. அடுத்த படத்தை குறித்தும் தற்போது நான் எந்த முடிவும் எடுக்கவும் இல்லை என்றும் கூறியுள்ளார் அஜித். இதனால் பலரும் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here