‘இதெல்லாம் பண்ணி என்ன பிரயோஜனம், அதன் ஒன்னும் இல்லையே’ – மீண்டும் கிண்டலுக்கு ஆளான கீர்த்தி!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீதை சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல நாட்களுக்கு பிறகு ஒரு ரீல்ஸ் செய்து அதனை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் தான், நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் பிரபல தயாரிப்பாளரின் மகள் ஆவார். இவர் தமிழில் முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினி முருகன்” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். மிகவும் குடும்பபாங்காக நடித்ததால், இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். முன்னணி நடிகர் விஜய்யுடன் மட்டும் 2 திரைப்படங்களில் நடித்து விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து குமரன் விலகுகிறாரா?? அவரே வெளியிட்ட பதிவு!!

இப்படியாக இருக்க, இவர் இந்த பொது முடக்கத்தின் போது தனது உடல் எடையினை குறைத்து ஒல்லியாக மாறி விட்டார். அவரது இந்த திடீர் மாற்றத்தால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதே போல் அவரது அழகே அவரது அந்த பூசினாற் போல இருக்கும் உடல் அமைப்பு தான் என்று கூறி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரசிகர்களின் ஆதங்கத்தினை புரிந்து கொண்ட கீர்த்தி மீண்டும் தனது உடல் எடையினை கூட்டும் வேலையில் இறங்கி உள்ளார். இதனை அடுத்து பல நாட்களுக்கு பிறகு இவர் ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். பட்டு சேலை அணிந்து எதார்த்தமாக இருக்கும் அந்த ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

முழு விடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here