முதன் முறையாக தருமபுரியில் ஜல்லிக்கட்டு – 500 காளைமாடுகள் பங்கேற்பு!!

0

தருமபுரி மாவட்டத்தில் முதன் முறையாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இந்த நிகழ்வினை கண்டு களித்தனர்.

ஜல்லிக்கட்டு:

கடந்த சனிக்கிழமையன்று தர்மபுரி மாவட்டம் சோகத்தூரில் அமைந்துள்ள tnc மைதானத்தில், தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. முதன் முறையாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 500 காளைமாடுகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்குபெற்றனர். தருமபுரியிலிருந்து மட்டும் 130 காளைகள் பங்கு பெற்றன. மேலும் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலிருந்தும் காளைகள் கொண்டுவரப்பட்டன.

நிவர் மற்றும் புரெவி புயல் நிவாரண நிதி – தமிழகத்திற்கு ரூ. 286.91 கோடி ஒதுக்கீடு!!

வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை திறந்து விட்டபிறகு வரிசையாக பாய்ந்து வந்த மாடுகளை வீரர்கள் அடக்கி தங்களது வீரத்தை காட்டினார். வீரர்களுக்கு அடங்காத மாடுகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்பட்டன. முன்னதாக இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா தொடங்கி வைத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சி.பிரவேஷ் குமார், சட்டப்பேரவை உறுப்பிப்பனர்களான ஆ.கோவிந்தசாமி மற்றும் வே.சம்பத்குமார், ஜல்லிக்கட்டு பேரவை கௌரவ தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணிகளில் தருமபுரி,சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here