நிவர் மற்றும் புரெவி புயல் நிவாரண நிதி – தமிழகத்திற்கு ரூ. 286.91 கோடி ஒதுக்கீடு!!

0

கடந்த வருடம் ஏற்பட்ட மாபெரும் இயற்கை பேரிடர்களான நிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகதிற்கும் மேலும் சில மாநிலங்களுக்கு நிவாரண நிதியினை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.286.91 கோடி நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண நிதி:

கடந்த வருடம் நிகழ்ந்த மிக பெரிய இயற்கை பேரிடர்களான நிவர் மற்றும் புரெவி புயல்களால் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. அந்த பாதிப்புகளை சரி செய்யவும் மேலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்த பேரிடர்களால் ஏற்பட்டுள்ள நிலைமையை சீரமைக்கவும் தற்போது மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, 3113.50 கோடி ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.

nivar cylone

இந்தியாவில் பல மாநிலங்களில் நில அதிர்வு – பீதியில் மக்கள்!!

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா தலைமையில் இன்று நடைபெற்ற உயர் நிலை குழுக்கூட்டத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுளன. அந்த அறிவிப்பில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தது ஒதுக்கப்படும் ரூ.3113.50 கோடியிலிருந்து தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புரெவி புயலுக்கான நிதியாக ரூ. 223.77 கோடியும் நிவர் புயலுக்கான நிதியாக ரூ.63.14 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரிக்கு ரூ.9.91 கோடியும் அதிகபட்ச தொகையாக பிஹார் மாநிலத்திற்கு ரூ.1255.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here