#GoBackModi ட்ரெண்டாகும் ஹாஷ்டாக் – மோடி வருகைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு!!

0

தமிழகத்தில் பல திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நாளை பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகிறார். இவரது வருகையை எதிர்த்து GoBackModi என்னும் ஹாஷ்டாகை ட்ரெண்டு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

நரேந்திர மோடி:

தமிழகத்தில் நாளை பல திட்டங்கள் துவக்க பட உள்ளது. இந்த திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நாட்டின் பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இவர் நாளை காலை சரியாக 10.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார். மேலும் தமிழக ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை வந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ் விமானப்படை தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். கொரோனா பரவலுக்கு அடுத்து மோடி நேரில் துவக்க விழாவில் கலந்துகொள்வது இதுவே முதன் முறை. அங்கு சென்ற பின் மோடி பல திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். வண்ணாரப்பேட்டை-விம்கோ நகருக்கான மெட்ரோ ரயில் பாதை உள்ளிட்ட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

தமிழக அரசு உதவி பெற 1100 சேவை எண் , கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு – முதல்வர் எடப்பாடி அதிரடி!!

மேலும் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 2 என்ற புதிய பீரங்கியை அறிமுகப்படுத்தவுள்ளார். தற்போது விவசாய போராட்டங்கள் இன்னும் தொடர்வதால், இந்நிலையில் தமிழகத்திற்கு மோடி வருகிறார். இதனை எதிர்த்து GoBackModi என்ற ஹாஷ்டாகை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் நாளை கருப்பு தினம் என்றும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here