‘கல்வில கிடைக்குற காசு அரசியல்ல கெடைக்காது’…,’வாத்தி’ ட்ரைலர் ரிலீஸ்…,

0
'கல்வில கிடைக்குற காசு அரசியல்ல கெடைக்காது'...,'வாத்தி' ட்ரைலர் ரிலீஸ்...,
'கல்வில கிடைக்குற காசு அரசியல்ல கெடைக்காது'...,'வாத்தி' ட்ரைலர் ரிலீஸ்...,

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

வாத்தி ட்ரைலர்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சம்யுக்தா நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை மையமாக வைத்து எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கல்வி மற்றும் அதனை சுற்றி நடக்கும் வியாபாரம் குறித்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளது ‘வாத்தி’ திரைப்படம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளை எடுத்து நடத்தும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்று கல்வியை வியாபாரமாக்க முயற்சிக்கிறது. இதனை அறியாமல், தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர் தனுஷ் கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றுக்கு ஆசிரியராக செல்கிறார். அங்கு, பணம் இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் படிப்பை பாதியில் விடக்கூடிய அவலம் ஏற்படுகிறது.

ரவீந்திர ஜடேஜாவின் 14 ஆண்டு கிரிக்கெட் பயணம்., இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவு!!!

ஒரு கட்டத்தில் இந்த நிகழ்வுக்கு பின்னால் இருப்பவர் சமுத்திரக்கனி என்று தெரிய வருகிறது. அதாவது, ‘பணம் இருந்தால் தான் படிக்க முடியும்’ என்ற கொள்கையுடன் இருக்கும் சமுத்திரக்கனியுடன் ஒத்துப்போகாமல் தனுஷ் எதிர்த்து நிற்கிறார். இதனால், அடிதடி ஏற்படுகிறது. இதற்கிடையில், சமுத்திரக்கனியின் எதிர்ப்பை மீறி தனுஷ் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தாரா என்ற விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது ‘வாத்தி’ ட்ரைலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here