
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தற்போதைய பெறும் எதிர்பார்ப்பாக இருப்பது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு தான். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாகும் என்பதற்கான அறிகுறிகள் தற்போது அதிகரித்துள்ளது. அதாவது, அகவிலைப்படியை கணக்கிடும் AICPI குறியீட்டு தரவை அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த தரவின் படி, ஜூலை மாதம் வரை 136.4 புள்ளிகளாக இருந்த AICPI குறியீட்டு தற்போது 139.7 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இதுவரை 42%- ஆக உள்ள அகவிலைப்படி 4% உயர்ந்து 46%-ஆக அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த உயர்வின் மூலம் குறைந்த பட்சம் ரூ.18,000 சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரூ. 7280 வரை உயர்ந்து அதிகபட்சமாக ரூ. 25,280 பெற கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.