இந்தியாவிற்கு நிதியுதவி செய்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ். இவர் தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் வாங்குவதற்காக பிரதமரின் பி.எம்.கேர்ஸுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

பேட் கம்மின்ஸ்:

இந்தியாவில் தற்போது 14வது ஐபிஎல் மெகா தொடர் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் அதிகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி தங்களது நாட்டுக்கு சென்று வருகின்றனர். நாட்டில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக கூகிள் நிறுவனம் சுமார் ரூ.135 கோடி இந்தியாவிற்கு நிதியுதவி செய்துள்ளது. அந்த வகையில் பலர் இந்தியாவிற்கு நிதியுதவி செய்து வருகின்றனர். மேலும் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்தும் பலர் தங்களது வேதனையை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

என்ன தப்பு செஞ்சாலும் நீங்க கியூட் தான் வெண்பா – வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!!

இவர் தற்போது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இந்திய பிரதமர் மோடியின் பி.எம் கேர்ஸுக்கு 50,000 அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் இந்தியாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க நிதி உதவி அளித்துள்ளார். மேலும் கொரோனா தொற்றிற்கு மத்தியில் ஐபிஎல் தொடர் தேவையா?? என்று வினவப்படும் கேள்விக்கு, ஊரடங்கால் வீட்டில் இருப்பவர்களுக்கு இது சிறு மகிழ்வை தரும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலையை குறித்து தனது வேதனையையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here