என்ன தப்பு செஞ்சாலும் நீங்க கியூட் தான் வெண்பா – வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!!

0

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் வெண்பா தற்போது தப்பும் தவறுமாக ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். இருப்பினும், அந்த ரீல்ஸ் கியூட்டாக இருப்பதால் ரசிகர்கள் அதனை ரசித்து வருகின்றனர்.

“பாரதி கண்ணம்மா” வெண்பா

தற்போது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வரும் சீரியல் என்றால் அது விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் தான். இந்த சீரியலில் தற்போது பல முக்கிய ட்விஸ்டுகள் உள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகியை பலருக்கு பிடித்தாலும், இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் வெண்பாவை அனைவருக்கும் பிடிக்கும். இவர் அந்த சீரியலில் செய்யும் வில்லத்தனத்திற்கு ஒரு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது தேர்ந்த நடிப்பிற்காக இவருக்கு இந்த ஆண்டு “சிறந்த வில்லி” என்ற விருதினை விஜய் தொலைக்காட்சி வழங்கி கவுரவித்தது. சினிமா துறைக்கு வந்து 8 வருடங்களில் தனக்கு கிடைத்த முதல் விருது இது தான் என்று சந்தோச மிகுதியில் பாரீனா கூறினார். இப்படியாக இருக்க, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.

‘கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படமாட்டாது’ – திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி!!

தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் ஆகியவற்றை தொடர்ந்து அவர் பதிவிட்டு வருகிறார். இப்படியாக இருக்க, இன்ஸ்டாகிராமில் அனைவரும் ட்ரெண்டிங்காக ஒரு ரீல்ஸ் செய்து வருகின்றனர். அதாவது ஒரு இடத்தில் நிற்கும் போது பிளாக் & வொயிட் நிறத்தில் மாறும். இதனை “பாரதி கண்ணம்மா” வெண்பாவும் செய்து பார்க்க, அது எக்கு தப்பாய் மாறி உள்ளது. அதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடவும் செய்துள்ளார். தப்பாக அவர் ரீல்ஸ் செய்திருந்தாலும், கியூட்டாக இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here