குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி – கோவாக்சின் நிறுவனம் அறிக்கை!!

0

நாட்டில் கொரோனாவில் இருந்து மக்கள் மீள்வதற்காக வழங்கப்பட்டு வருகிறது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள். இந்நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த தகவலை பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி:

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் நடைமுறைக்கு வந்தது. சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக தடுப்பூசி பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பல கட்டமாக நடந்து வந்த தடுப்பூசி பணிகள் தற்போது 18 வயதிற்குமேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் சில பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் சில உலக நாடுகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் நடைமுறைக்கு வரவுள்ளது. தற்போது அந்த வகையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும் என்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – பலி எண்ணிக்கை புதிய உச்சம்!!

இந்த நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் தெரிவித்ததாவது, குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகள் வருகிற ஜூன் மாதம் தொடங்கலாம் என்று தெரிவித்தது, மேலும் இதற்கு மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டின் இறுதியில் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் என்றும் இந்த ஆண்டின் இறுதியில் தங்கள் நிறுவனம் உற்பத்தி திறனை 700 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here