கோவாக்சினுக்கு அவசர கால அங்கீகாரம் – உலக சுகாதார மையம் விரைவில் அனுமதி?

0
தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்..

கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் உலக சுகாதார மையம் அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

அவசர கால அனுமதி:

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பல லட்சம் மக்களை காவு வாங்கியுள்ளது.  நாடு முழுவதும் கொரானாவின் இரண்டு அலை தாக்கங்களால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இந்த தொற்றை தடுக்க இது வரை அரசின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் பொது முடக்கம் மட்டுமே, அதனால் தான் இந்த வைரஸின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

 

தற்போது இரண்டாம் அலை வரை தாக்கியுள்ள இந்த வைரஸ் விரைவில் மூன்றாம் கட்டமாக உருமாறி தாக்கும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி இருந்து வருகிறது.   தற்போது வரை  கோவாக்சின்,  கோவிஷில்டு  மற்றும் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இதில், கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத் தகுந்தது.  இதில், ஸ்புட்னிக் வி  என்ற தடுப்பூசி ரஸ்யாவில் தயாரிக்கப்பட்டது என்பது கவனிக்க தகுந்தது.  இந்த தடுப்பூசிகள் தற்போது இரண்டு தவணைகளாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது, ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 78% செயல்திறன் மிக்க கோவாக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அவசர கால அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடக்க உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.  ஏற்கனவே, மத்திய அரசு இந்த தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கான அவசர கால பயன்பாடு நிச்சயம் மக்களுக்கு பயனளிக்கும் என நம்பப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here