இயல்பு நிலைக்கு திரும்பிய சீனா – 76 நாட்களுக்கு பிறகு லாக் டவுன் முடிவுக்கு வந்தது..!

0

கொரோனா தற்போது உலகமெங்கிலும் வேகமாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளும் குழம்பி போய் உள்ளனர். மேலும் இந்த நோய் முதலில் சீனாவில் உஹான் நகரில் தான் தோன்றிது. தற்போது 76 நாட்களுக்கு அடுத்து சீனாவில் லாக்டவுன் முடிவுக்கு வந்துள்ளது.

சீனா

சீனாவில் உஹான் நகரில் தான் முதன்முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு அடுத்தடுத்து வேகமாக பரவ தொடங்கியது. இந்த நோய் பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இந்த நோயை எதிர்கொள்ள முடியாமல் பல வல்லரசு நாடுகளே திணறி போயிருந்தனர்.

உலகளவில் 14 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு, 82 ஆயிரத்தை தாண்டிய உயிர் பலி – இந்தியாவின் நிலைமை என்ன..?

Coronavirus in China: In a first, Chinese mainland reports zero ...

தற்போது இந்த கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு, தனது அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெற்று தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது சீனா. முத்தாய்ப்பாக சீனாவில் கொரோனா தோன்றிய வுஹன் நகரத்தில் லாக் டவுன் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு இயல்புநிலை திரும்பி உள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பியது

சீனாவில் 77,167 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1242 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவில் 81,740 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3331 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் சீனாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

One worker's grueling journey home shows China isn't normal yet

அங்கு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. சீனாவில் நேற்று 20 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதில் 18 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதே சமயம் கடந்த 11 நாட்களாக சீனாவின் வுஹனில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஆம் அங்கு மொத்தமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

க்யூஆர் கோட்

தற்போது சீனாவில் வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது. சீனாவில் 76 நாட்களுக்கு பிறகு வுஹன் நகரத்தின் லாக் டவுன் முடிவிற்கு வந்துள்ளது. அதேபோல் இதனால் சீனாவில் ஹூபேய் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தடைகளை அகற்றி உள்ளது. மேலும் ஹோட்டல்கள், கடைகள் திறக்கப்பட்டது. முக்கியமாக சில இடங்களில் மால்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது.

How to read QR codes - EGas Depot

அங்கு வுஹன் நகரத்தை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் வெளியேறலாம். அங்கு மக்களின் ஆரோக்கியத்தை பொறுத்து அவர்களுக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை என்று மூன்று வண்ணங்களில் க்யூஆர் கோட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் பச்சை நிறம் உள்ளவர்கள் வேறு மாகாணங்களில் சென்று குடியேறலாம். இன்றில் இருந்து வுஹனில் ரயில் போக்குவரத்து தொடங்க உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here