இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை – ஐசிஎம்ஆர் தகவல்..!

0
ICMR REPORT
ICMR REPORT

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அது இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து உள்ளது.

உயிரிழப்புகள் குறைவு:

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் புது உச்சத்தை அடைந்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பலராம் பார்கவா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் பொது முடக்கம் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பொது முடக்கம் இல்லையென்றால் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது – மாநில அரசு அதிரடி உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர்கள் 49.21 சதவீதம் பேர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here