சென்னையில் 15 நாட்கள் முழு ஊரடங்கா..? கடைகளை அடைக்கத் தயார் என வணிகர் சங்கம் அறிவிப்பு..!

0
chennai lock down
chennai lock down

சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் கடைகளை அடைக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து உள்ளார்.

சென்னையில் முழு ஊரடங்கு:

தமிழகத்தின் தலைநகரம் என்பது மாறி தற்போது கொரோனா வைரஸின் தலைநகரமாக சென்னை மாறி வருகிறது. அந்த அளவிற்கு அங்கு வைரஸின் தாக்கம் மற்றும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரித்து முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சென்னையில் இதுவரை 360 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை – ஐசிஎம்ஆர் தகவல்..!

இந்நிலையில் இன்று சென்னையில் தமிழக நிதித்துறை செயலாளரிடம் மனு அளித்த பின்னர் வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது சென்னையில் முதல்வர் முழு ஊரடங்கை அறிவித்தால் 15 நாட்கள் கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது முதல்வர் மற்றும் அமைச்சரவை கூடி எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here