கொரோனாவிற்கு 10 ரூபாய்க்கு மருந்து – இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு அறிவிப்பு..!

0
dexamethasone tablet
dexamethasone tablet

உலகம் முழுவதும் கொரோனா தொற்று இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013லிருந்து 1,86,935 ஆக உயர்வு.கொரோனாவுக்கு சிகிச்சைக்காக ‘டெக்ஸாமெதசோன்’ என்ற மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பது நம்பிக்கை தருவதாக மருத்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளனர்.

கொரோனா மருந்து

dexamethasone medicine
dexamethasone medicine

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பத்த மரண நிலையில் இருந்து காப்பாத்தவும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளனர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்தை கண்டுபிடித்துள்ளனர் அது கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்தும் மிக குறைந்த விலையில் இந்த மருந்து கிடைக்கும் என கூறி உள்ளனர்.

டெக்ஸாமெதோசான் மருந்து

dexamethasone tablet
dexamethasone tablet

டெக்ஸாமெதோசான் மருந்து வெண்ட்டிலேட்டர் ஆக்சிஜன் சப்போர்ட் கிடைக்க வேண்டிய சுவாச பாதிப்பின்போது அளிக்கப்படும் உயிர் காக்கும் மருந்தாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கிட்டத்தட்ட 4,31,000 பேரை விட அதிகமானவர்களைக் பழிவாங்கிருக்கும் இந்த கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உடனடியாக குறைக்க இந்த மருந்து பயன்படுவதாக இங்கிலாந்து முதன்மை மருத்துவ அலுவலர் க்றிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.வெண்ட்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் 5 பேரில் மூன்று நோயாளிகள் இந்த மருந்து அளித்த பின் உயிர் பிழைத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான சவுமியா சுவாமிநாதன், உயிர் காக்கும் மருந்தாக ஆய்வுகளில் கண்டறியப்பட்ட டெக்ஸமெதோசான் மிகவும் நம்பிக்கையூட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுமேலும், பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவும் என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஏழை நாடுகளுக்கு உதவியாக இருக்கும்

poor country
poor country

கொரோனா தொற்று பரவியுள்ள ஏழை நாடுகளுக்கு டெக்ஸமெதோசான் மருந்து மிகவும் உதவியாக இருக்கும்.மனித உடலின் இருக்கும் நோய் எதிர்ப்பு கொரோனா நோயை எதிர்த்து போரிடும் போது உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குணப்படுத்த இந்த டெக்ஸமெத்தசோன் பயன்படுகிறது.எனினும், லேசான கொரோனா தொற்று ஏற்பட்டு பெரிதாக பாதிப்பு இல்லாதவர்களுக்கு இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன்-ஐ தயாரிப்பதால் ரூ.10 விலையில், 10 மில்லி மருந்து கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here