கொரோனா ரணகளத்திலும் கிளிகிளுப்பாக ‘டிக் டாக்’ செய்யும் இளம்பெண் – ரசித்த 3 ஊழியர்கள் டிஸ்மிஸ்..!

0

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இளம்பெண் டிக்டாக் செய்துள்ளார். அந்த வீடியோக்களை செல்போனில் வாங்கி ஆர்வமுடன் பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் 3 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

சோகமாக டிக் டாக் வீடியோ..!

அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் கடுமையான காய்ச்சல், சளி அறிகுறியால் கடந்த 20 ம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக டெஸ்ட் செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் அதை பற்றின சோக கீதத்தைதான் டிக்டாக் வீடியோவாக அந்த பெண் பதிவிட்டிருந்தார். “கொரோனா வைரஸ் வந்துச்சு நம்ம கிட்டதான். அது வந்துச்சுன்னா நம்ம எல்லாம் மட்டைதான்” கதறவிட்டாங்கோ, பதறவிட்டாங்கோ, பரவ விட்டாங்கோ. வைரஸை பரப்பி விட்டாங்கோ..”

“இப்படியே வாழந்தாக்கா புழு மட்டும் வாழும்டா, பூச்சி மட்டும் வாழுடா. மனுஷ பய இடம் மட்டும் மண்ணாகி போகுமடா” என்று பெட்-டில் படுத்து கொண்டே டிக்டாக் வீடியோக்களை செய்துள்ளார்.

தூய்மை பணியாளர்கள் டிஸ்மிஸ்..!

அந்த பெண்ணோ சும்மா இல்லாமல் செல்போனில் டிக்டாக் செய்த வீடியோவை ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடமும் அந்த வீடியோவை செல்போனில் காட்டி உள்ளார்.

இதனையடுத்து மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3 பேரையும் அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.. அதுமட்டுமல்ல, கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் அந்த 3 பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here