தள்ளிப்போன ‘கவாஸாகி ZX-25R அறிமுகம்’ – கவலையில் KAWASAKI ரசிகர்கள்..!

0

கொரோனா வைரசால் ஆட்டோமொபைல் துறையும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து உள்ளது. அந்த வகையில் விரைவில் அறிமுகமாக இருந்த கவாஸாகி ZX 25R குவார்ட்டர்-லிட்டர் ஸ்போர்ட்ஸ் பைக் தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவில் அந்த பைக் குறித்த முழு விபரத்தையும் காணலாம்.

ஒத்திவைக்கப்பட்ட ரிலீஸ்..!

கவாஸாகி நிறுவனம் இந்த ஸ்போர்ட் பைக்கை வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி இந்தோனிஷியாவில் நடைபெற இருந்த கவாஸாகி பைக் வாரத்தில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இது தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த பைக் குறித்து கவாஸாகி நிறுவனம் வெளியிட்ட வீடீயோவைப் பார்க்கும் போது அது நிஞ்சா 400 மாடலை ஒத்திருப்பது தெரிய வந்துள்ளது. இப்பொது இந்த பைக் பவர் மற்றும் சிறப்பம்சங்களை பார்க்கலாமா..!

கவாஸாகி ZX 25R சிறப்பம்சங்கள்:

என்ஜின் – 249சிசி இன்லைன், 4 சிலிண்டர் என்ஜின்
பவர் – அதிகபட்சமாக 17,000 ஆர்பிஎம், 40 – 50 bhp பவர்
அதிகபட்ச வேகம் – 160 kmph, எதிர்பார்க்கப்படும் விலை – இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சம்.

மேலும் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், விரைவான ஷிஃப்டர், பவர் மோட்கள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் ஷோவா எஸ்எஃப்எஃப்-பிபி ஃபோர்க்கும், கவாஸாகியின் பேக்-லிங்க் பின்புறத்திலும் பொருத்தப்பட்டு உள்ளது.

அதுமட்டுமில்லாமல் பார்ட்-அனலாக், 17,000 ஆர்பிஎம்-ல் சென்றால் சிவப்பாக மாறும் மினி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவையும் வழங்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here