2022 ஆம் ஆண்டில் தான் கொரோனாவிற்கு தடுப்பூசி கிடைக்கும் – எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்!!

0

இந்தியாவில் உள்ள மக்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசி 2022 ஆம் ஆண்டில் தான் கிடைக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியா அதிக மக்கள் தொகை உள்ள நாடு என்பதால், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க சில காலம் ஆகும் என்று அவர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி:

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்பு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டது. ஆனால் முழு தளர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. உலக நாடுகளில் மொத்தம் கொரோனா எண்ணிக்கை 4,90,31,012 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,39,608 ஆக உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 1.26 லட்சத்திற்கு மேற்பட்டோர் கொரோனாவால் மரணமடைந்து உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corona vaccine
vaccine

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க நாடு முழுவதும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா முழுமையாக போக்க யாரும் இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா கொரோனா தடுப்பூசி 2022 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடிக்க முடியும் என்று அறிவித்துள்ளார். அதுவரை மக்கள் அனைவரும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளார்கள். ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பொதுமக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்பவில்லை. கொரோனா தடுப்பு மருந்து வந்துவிட்டால் நிலைமை சீராகும் என்று பொதுமக்கள் தடுப்பூசி வருவதற்கு காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here