கொரோனாவிற்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி – களத்தில் இறங்கிய முன்னணி நிறுவனம்..!

0
Corona Vaccine
Corona Vaccine

உலகை உலுக்கும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு ஊசியை தயாரிக்க முன்னனி நிறுவனம் ஒன்று திட்டமிட்டு உள்ளது. 200 “டோஸ்” உற்பத்தி செய்ய அந்நிறுவனம் இலக்கை நிர்ணயித்து உள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி சீனாவின் உகான் நகரத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று உலகில் உள்ள 200 நாடுகளை உலுக்கி உள்ளது. அதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கபடாத நிலையில் பலர் இறந்து உள்ளனர். உலக நாடுகளில் 66 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பலியாகி உள்ளனர். இந்த பரவலை தடுக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு ஊசி ஒன்றே தீர்வாகும். இதனிடையே உலக நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு காலத்தில் இறங்கி உள்ளது. யார் முதலில் கண்டு பிடிக்கிறார்களோ அவர்களே கோடிகளை குவிக்க முடியும்.

அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம்:

இதனையடுத்து இங்கிலாந்து இல் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில், இங்கிலாந்து, சுவீடன் ஆகிய இரு நாடுகளின் கூட்டு நிறுவனமான “அஸ்ட்ராஜெனேகா” நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து தடுப்பூசியை தயாரிக்க ஆய்வுகளையும், சோதனைகளையும் செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த நிறுவனம் புற்றுநோய், இருதயநோய் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் இதுபற்றி கூறுகையில், “இப்போதே தடுப்பூசிகளை தயாரிக்க தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் தடுப்பூசி பயனுள்ளது என்பதை நிரூபிக்க முடியும். இந்த தடுப்பூசி பற்றிய முடிவுகள் வெளியாகும் நேரத்தில் அதைப் பயன்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த முடிவு ஆபத்து ஆனதாக உள்ளது. இது வேலை செய்யாவிட்டால் நிறுவனத்திற்கு இழப்பை ஈட்டித்தரும். ஆனால் இந்த கொரோனா சமயத்தில் லாபம் ஈட்ட கவனம் செலுத்த மாட்டோம்.

உலகெங்கிலும் ஏராளமான வினியோக சங்கிலிகளை உருவாக்கி வருகிறோம். தொற்றுநோய் காலத்தில் எந்த லாபமும் இல்லாமல் உலகளாவிய அணுகலை ஆதரிப்பதற்காகவும், இதுவரை 200 கோடி டோஸ் மருந்து உற்பத்திக்கான திறனை ஏற்படுத்தி இருக்கிறோம்” என்று கூறினார்.

200 கோடி டோஸ் தயாரிப்பு:

மேலும் இந்த நிறுவனம் 200 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக கூறி உள்ளது. கூடுதலாக இந்த நிறுவனம் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிக்க முடிவு செய்து உள்ளதாகவும் கூறி உள்ளது. தங்கள் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி ஏஇசட்டி 1222 பயன்தரத்தக்கதா என்று ஆகஸ்ட் மாதம் தெரிந்து விடும் என்றும் பாஸ்கல் கூறினார்.

இதனிடையே தடுப்பூசி வேலை செய்யாமல் போகவும் கூடும் என்று தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்பு கூட்டணியின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்டு ஹாட்செட் உண்மையை போட்டு உடைக்க தவறவில்லை.

செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம்:

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இந்தியாவில் உள்ள “செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா” நிறுவனத்துடன் இணைந்து உள்ளது. செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் உலகிலே அதிக தடுப்புஊசிகளை தயாரிக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸ் ஆதரவு அளிக்கிற 2 சுகாதார நிறுவனங்களுடன் 750 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,625 கோடி) அளவுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் அமெரிக்காவிற்கு 30 கோடி தடுப்பூசிகளை, இங்கிலாந்திற்கு 10 கோடி தடுப்பூசிகளை விநியோகிக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டு உள்ளது. அதில் முதல் கட்ட விநியோகம் செப்டம்பர் மாதம் நடத்த தீவிரமாக உள்ளது. இந்நிலையில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ கூறுகையில் “ கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசி உலகளாவிய பொது நன்மையாக பார்க்கப்பட வேண்டும். இதை மக்கள் தடுப்பூசி என்றே உலகத்தலைவர்கள் அழைப்பது அதிகரித்து வருகிறது” என்று கூறி உள்ளார்.

இந்த தடுப்பூசி பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பது விஞ்ஞானிகள் முதல் உலக மக்கள் அனைவரும் பிராத்திப்பதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here