கொரோனா தடுப்பூசி சான்றிழை இணையத்தில் பகிர்ந்துள்ளீர்களா??? உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!!!

0

கொரோனா தடுப்பூசி சான்றிதழை இணையத்தில் பகிர்வது ஆபத்தை விளைவிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு பகிரப்படும் தகவல்களால் மக்கள் ஏமாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மக்களை எச்சரித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிறகு, மத்திய அரசு கொரோனா தடுப்பூசி சான்றிதழை மக்களுக்கு வழங்குகிறது. தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை வைத்திருப்பதும் முக்கியம், ஏனெனில் இது வரும் மாதங்களில் சர்வதேச பயணம் மற்றும் பல விஷயங்களுக்கு தேவைப்படலாம்.

இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொண்ட பின், அதை போட்டுக்கொண்டதற்கான கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயல்முறையை CoWin வலைத்தளம் அல்லது செயலி மற்றும் ஆரோக்யா சேது செயலி வழியாக செய்யலாம். தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்த பின் பலர் அவரை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

COVID-19 தடுப்பூசி சான்றிதழ்களை சமூக ஊடகங்களில் பகிர்வது தவறு என உள்துறை அமைச்சகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒரு நபரின் தடுப்பூசி சான்றிதழில் அவர்களின் பெயர்கள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சான்றிதழ்களை இணையவழி மோசடி செய்பவர்கள் மக்களை மோசடி செய்ய தவறாகப் பயன்படுத்தலாம் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here