கொரோனாவுக்கு இது மட்டும் தான் ஒரே மருந்து – முதல்வர் பழனிசாமி உரை!!

0

கொரோனா பாதிப்புக்கு விழிப்புணர்வு மட்டும் தான் ஒரே மருந்து என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின் முதல்வர் தனது உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

முதல்வர் உரை:

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று சென்ற முதல்வர் பழனிசாமி அவர்கள் 14.94 கோடி ரூபாய் மதிப்பிலான 12 திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி அடிக்கல் நாட்டினார். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் கொரோனா முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதற்கு ஒரே மருந்து விழிப்புணர்வு தான் என கூறினார். திருவள்ளூரில் அதிகமான தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் நீர் சேமிக்கப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டார் எஸ்பி பாலசுப்ரமணியம் – மகன் சரண் தகவல்!!

நகரி ஆற்றில் ரூ.18 கோடி மதிப்பில் தடுப்பணை, கண்டலேறு பூண்டி கால்வாய் சீரமைப்பு, விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ. 230.97 கோடி, 60 கோடி ரூபாய் மதிப்பில் அரசு சட்டக்கல்லூரி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு வருவதாக முதல்வர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here