கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையவே இல்லை – நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்!!!

0
கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் வேளையில் இன்னும் இரண்டாம் அலை முடியவே இல்லை என்ற அதிர்ச்சி தகவலை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரிப்பது அனைவர் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மக்கள் மாஸ்க் இன்றி பொது இடங்களில் சுற்றித் திரிவதாக பிரதமர் மோடி கவலைத் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப கடந்த சில நாட்களாக நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரமாக இருக்கிறது. மேலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் இமாச்சலப் பிரதேசம் , உத்தரகாண்ட் போன்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டமாக ஒன்று கூடுவதால் மேலும் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்விக்கு நிபுணர்கள் இன்னும் முழுவதுமாக கொரோனா இரண்டாம் அலையில் இருந்து நாம் வெளியே வரவில்லை என்ற பதிலை அளித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here