‘தமிழக சட்டமன்ற தேர்தல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம்’ – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகளும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் வெளியாகியது. தற்போது சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. தேர்தல் சமயத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தேர்தலின் போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இதனை தடுக்கும் வகையில் தேர்தல் அதிகாரி ஓர் முடிவை எடுத்துள்ளார். மேலும் கொரோனாவில் இருந்து தேர்தல் அதிகாரிகளையும், வாக்காளர்களை காப்பாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் ஆலோசித்துள்ளது. இந்நிலையில் வாக்களிக்க வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு 6 தொகுதி ஒதுக்கீடு!!

மேலும் கொரோனா தோற்று ஏற்பட்டவர்களும் வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அவகாசம் கொடுத்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் வழங்கும் பிபிஇ கிட்டை அணிந்து தான் வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மீதமுள்ள வாக்காளர்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here