இந்திய பங்குச்சந்தையை கடுமையாக தாக்கிய கொரோனா – வரலாறு காணாத வீழ்ச்சியால் நிறுத்தப்பட்ட வர்த்தகம்..!

0

கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 73 பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் விளைவாக பங்குச்சந்தையில் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வர்த்தகம் ஒரு மணிநேரம் தள்ளி வைக்கப்பட்டது.

மும்பை பங்குச்சந்தை

நேற்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2919 புள்ளிகள் சரிந்து, 32778 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. நிப்டி 868 புள்ளிகள் சரிந்து 9590 புள்ளிகளில் நிலைபெற்றது. இதே போல் இன்று நடந்த பங்குச்சந்தை வர்த்தகத்தில் யாரும் கண்டிடாத அளவில் சென்செக்ஸ் 3150 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

அதிகபட்சமாக சென்செக்ஸ் 3177 புள்ளிகள் சரிந்து 29600 என்ற அளவில் வர்த்தகம் ஆனது. இதனால் நிப்டி 10% அளவிற்கு சரிந்தது. காலை வர்த்தகத்தின்போது நிப்டி 966 புள்ளிகள் சரிந்து 8624 என்ற அளவில் தடுமாற்றத்துடன் இருந்தது. இது முதலீட்டாளர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வர்த்தகம் ஒரு மணிநேரம் தள்ளிவைக்கபட்டது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here