மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – வருகை ஒழுங்குபடுத்துதல்!!

0

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அலுவலகங்களில் பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் பணி

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்களை மட்டுமே அனுமதிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மத்திய அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 15% உயர்ந்த கொரோனா தொற்று – அரசு மருத்துவ ஆலோசகர்!!

இது குறித்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் அளித்துள்ள உத்தரவில், ‘கொரோனா பரவல் அதிகரிப்பால் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் வருகையை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஒவ்வொரு துறையின் செயலர்கள் ஈடுபட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அலுவலகம் வர தேவையில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அலுவலகங்களில் பணியாளர் எண்ணிக்கையை குறைத்து, ஷிப்ட் முறையை பின்பற்றலாம். கொரோனா கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருக்கும் அலுவலக பணியாளர்கள், அலுவலகம் வரத்தேவையில்லை. இவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக பணிகளை மேற்கொள்ளலாம்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here