கொரோனா நோய்த்தொற்றிற்கு மேலும் புதிய மருந்து – மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்!!

0
Coronavirus COVID-19 medical test vaccine research and development concept. Scientist in laboratory study and analyze scientific sample of Coronavirus antibody to produce drug treatment for COVID-19.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றினை குறைக்கும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மேலும் ஓர் புதிய மருந்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

புதிய மருந்து:

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக இருந்து வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு தற்போது இந்தியாவில் சுமார் 4 லட்சத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு மருந்தாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சில மருந்துகளை மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்காக வழங்க ஒப்புதல் அளித்து வருகிறது. அவை அனைத்தும் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் எனப்படும் டி.ஆர்.டி.ஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தில் இயங்கும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகம் 2-டியோக்சி-டி-குளுக்கோஸ் என்னும் மருந்தின் பார்முலாவை கொண்டு கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ளனர்.

கொரோனவிற்காக சி.டி.ஸ்கேன் எப்போது மேற்கொள்ளலாம்? மருத்துவர்கள் கருத்து!!

russia announces and register new corona virus vaccine

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த மருந்து பொடி வடிவில் இருக்கும் என்றும் அதனை தண்ணீரில் கலந்து வாய் வழியாக சாப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் கட்டுப்பாடுகளின் கூறுகள் நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறதாம். ஆக்சிஜன் சார்புநிலை குறைக்கிறது என்றும் மருந்து சோதனைகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளில் நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here