நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 15% உயர்ந்த கொரோனா தொற்று – அரசு மருத்துவ ஆலோசகர்!!

0

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 24 மாநிலங்களில் 15% க்கும் அதிகமான தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது என்று மத்திய அரசின் மருத்துவ வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

நாட்டில் தொற்றின் பாதிப்பு அதிக வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 4,14,188 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 3915 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 36,45,164 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா கடந்த வாரம் கோவா (48.5 சதவீதம்), ஹரியானா (36.1 சதவீதம்), புதுச்சேரி (34.9 சதவீதம்) ), மேற்கு வங்கம் (33.1 சதவீதம்), கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான் (தலா 29.9 சதவீதம்) ஆகிய ஏழு மாநிலங்களில் தொற்று பாதிப்பு 30% க்கும் அதிகமாக பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

கொரோனவிற்காக சி.டி.ஸ்கேன் எப்போது மேற்கொள்ளலாம்? மருத்துவர்கள் கருத்து!!

12 மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 மாநிலங்களில் 50,000 முதல் 1,00,000 வரையிலானவர்கள் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளார். மூன்று மாநிலங்களில் மட்டும் பாதிப்பு 5% க்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் பரவலால் மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என்று மத்திய அரசின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாடு முழுவதும் வலுவான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால் இந்தியாவை மூன்றாவது அலையில் சிக்காமல் பாதுகாக்கலாம். மாநிலங்களும் தீவிர கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என்றும், மேலும், முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சிகிச்சை மற்றும் சோதனைகளை முறையாக பின்பற்றினால் இந்த நோயிலிருந்து தப்பிக்கலாம் என்று பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here