வட சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா கட்டுப்பாடு மண்டலங்கள் – மாநகராட்சி ஆய்வில் தகவல்!!!

0

வடசென்னையில், கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள காரணத்தால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் என்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் நடத்திய ஆய்வில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தகவல்களின் அடிப்படியில் 10 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள் மே 9 முதல் 17 வரை காலகட்டத்தில் மொத்த 22.8% அதிகரித்துள்ளன. மே 17 நிலவரப்படி அன்று சென்னையில் 890 கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தன, வடசென்னையில் 158, மத்திய சென்னையில்  489 மற்றும் சென்னையின் தெற்கு பகுதிகளில் 243 கணக்கிடப்பட்டுள்ளன.

சென்னையில் கட்டுப்பாட்டு மண்டலங்களே இல்லாத வார்டுகளின் எண்ணிக்கை மே மாதம்  51 லிருந்து 42 ஆக குறையத்தொடங்கியுள்ளது. அதில் பெரும்பாலான கட்டுப்பாட்டு மண்டலங்கள் மணலி, மாதவரம், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூரை சேர்ந்தவை. அதேபோல் சென்னையின் தெற்கு பகுதிகளில் வளசரவாக்கம், ஆலந்தூர் போன்ற இடங்களில் 37% கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா நோயுற்றோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநில அரசு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் நாளுக்கு நாள் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வடசென்னையில் அதிகரித்துள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் செய்தி அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here