சுவையான “கார்ன் கட்லெட்” – செஞ்சு தான் பாருங்களேன்!!

0

சைவ பிரியர்களுக்கு கார்ன், காளான் போன்ற உணவு பதார்த்தங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இன்று குழந்தைகளுக்கான ஸ்பெஷல் ரெசிபியான “கார்ன் கட்லெட்” ரெசிபி குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • கார்ன் – 1/2 கப்
  • உருளைக்கிழங்கு – 1/2 கப்
  • கேப்ஸிகம் – 1
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி & பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  • சாட் மசாலா – 1 டீஸ்பூன்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • பிரட் தூள் – 1 டீஸ்பூன்
  • கடலை மாவு – 1 டீஸ்பூன்
  • அரிசி மாவு – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில், எடுத்து வைத்துள்ள கார்னை கொஞ்சம் கோரகோரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியில் அதனை போட்டு வைத்து விட்டு மசித்து எடுத்து வைத்துள்ள உருளைகிளைக்கிழங்கு, வெங்காயம், கேப்ஸிகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின், இதில் மேற்குறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக போட்டு நன்றாக பிசைய வேண்டும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு அடித்த லாட்டரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பின், கையில் எண்ணெய் தடவி எடுத்து வைத்துள்ள மாவு கலவையினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி, அதில் எடுத்து வைத்துள்ள உருண்டைகளை பொரித்து எடுக்க வேண்டும். பொன்னிறமாக வந்ததும் இறக்கி விட வேண்டும். அவ்ளோ தான்!!

சுவையான “கார்ன் கட்லெட்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here