கேப்டனான முதல் போட்டியிலே சதம் அடித்து சாதனை செய்த சஞ்சு சாம்சன் – குவியும் பாராட்டுக்கள்!!

0
sanju
sanju

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தான் கேப்டனாக பதவி ஏற்ற முதல் போட்டியிலே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சஞ்சு சாம்சன்:

இந்தியாவில் 14வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் மிக பிரம்மிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணிகளும் இந்த தொடரில் முதன்முறையாக 200 ரன்களை தாண்டி சாதனை பிரமிக்கவைத்துள்ளனர். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 221 ரன்களை குவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தனது வெற்றியை இழந்தது. ஆனால் இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் கேப்டனாக அறிமுகமாகியுள்ள சஞ்சு சாம்சன் தனது முதல் போட்டியிலே மிக சிறப்பாக செயல்பட்டார். சூழ்நிலைக்கேற்ப அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வந்தார். மேலும் தான் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சஞ்சு சாம்சன்.

sanju
sanju

இதோ வந்துட்டாருல்ல நடன புயல் – ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் வார்னர்!!

இவர் வெறும் 54 பந்துகளில் தனது சதத்தை எட்டியுள்ளார். இவரால் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருந்தது. ஆனால் இவர் கடைசி பந்தில் தனது ஆட்டத்தை இழந்து வெற்றி வாய்ப்பினை தவறவிட்டார். இவர் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். அதில் 7 சிக்ஸ் மற்றும் 12 போர்கள் அடங்கும். தற்போது அதிரடி கட்டிய சஞ்சுவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here