பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு அடித்த லாட்டரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நடிகை காவியா தற்போது நடிகர் பரத் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை காவியா

தற்போது டாப் ரேட்டிங்கில் ஓடி கொண்டு இருக்கும் சீரியல் என்றால் அது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். அந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் அவரது கதாபாத்திரத்திற்கு நடிகை காவியா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் விஜய் டிவியின் முக்கியமான சீரியலான “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிகர் அருணிற்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஜீ தமிழுக்கு அடுத்த ஆப்பு – அர்ச்சனாவை தொடர்ந்து அங்கிருந்து விலகும் முக்கிய பிரபலம்!!

இதனை அடுத்து இவர் முல்லையாக நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில், மக்கள் அவரை அந்த கதாபாத்திரத்தில் ஏற்க மறுத்தனர். பின், காவியா நன்றாக நடித்ததால் இவரை அந்த கதாபாத்திரத்தில் மக்கள் ஏற்று கொண்டனர். இப்படியாக இருக்க, கவியாவிற்கு தளபதி விஜய்யின் “பிகில்” திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் நடிக்க இயலாமல் போய் விட்டதாம். தற்போது இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இவர் நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம். புது முக இயக்குனரான சக்திவேல் என்பவர் அந்த திரைப்படத்தினை இயக்க இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here