குக் வித் கோமாளி சீசன் 3இல் கலந்துகொள்ள போகும் நபர் இவர்கள் தானா?? சினி வட்டாரத்தில் கசிந்த தகவல்!!

0
cwc

விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி என்பதாலேயே குக் வித் கோமாளி சூப்பர் ஹிட் அடித்தது. குக்குகள் மும்முரமாக சமைக்க ஆரம்பிக்க கோமாளிகள் வந்து பாழாக்க நிகழ்ச்சியே கலகலப்பாக இருக்கும். மேலும் ஷிவாங்கி, புகழ், மணிமேகலை மற்றும் பாலா தான் இந்த நிகழ்ச்சியில் ஆணி வேர் என்றே சொல்லலாம்.

கோமாளிகள் மட்டுமில்லாமல் ஜட்ஜாக இருக்கும் வெங்கட் பட், தாமு இருவரும் சேர்ந்து அனைவரையும் கலாய்க்க சமையல் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் இருந்தது.

இந்நிலையில் தான் தற்போது தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ள இருப்பவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சௌந்தர்யா, பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவாக நடிக்கும் ஷீலா, மாடலிங் துறையில் கோபிநாத் போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சனம் செட்டி மற்றும் சின்ன பொண்ணு ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here