CWC -4ல் ஓவர் attitude காட்டும் முக்கிய கோமாளி.., டிஆர்பி குறைந்து தலையில் துண்டை போட்ட விஜய் டிவி!!

0
CWC -4ல் ஓவர் attitude காட்டும் முக்கிய கோமாளி.., டிஆர்பி குறைந்து தலையில் துண்டை போட்ட விஜய் டிவி!!
CWC -4ல் ஓவர் attitude காட்டும் முக்கிய கோமாளி.., டிஆர்பி குறைந்து தலையில் துண்டை போட்ட விஜய் டிவி!!

குக் வித் கோமாளி சீசன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், ஒரு கோமாளி குறித்து ரசிகர்கள் குற்றசாட்டு வைத்து வருகிறார்கள் என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4:

விஜய் டிவியில் டிஆர்பியை முதல் இடத்தில வைத்திருப்பதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருக்கும் ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். இதுவரை இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்துள்ளது. தற்போது சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத நிலையில் புது கோமாளிகளாக ஜிபி முத்து, ரவினா மற்றும் சிங்கப்பூர் தீபன் களமிறங்கியுள்ளனர் . பழைய கோமாளிகளில் புகழ், குரோஷி, சுனிதா மற்றும் மணிமேகலை இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீசனில் ஒரு கோமாளி ஓவர் attitude காமிக்கிறார் என்று ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். அதாவது, கடந்த 3 சீசன்கள் வெற்றி பெற ஒரு பகுதியாக இருந்தவர் தான் புகழ். அதை காரணம் காட்டி இந்த சீசனில் தேவை இல்லாத வேலைகளை பார்த்து வருகிறார். சொல்ல போனால் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்ற பெயரில் பல அக்கப்போர்களை செய்து வருகிறார்.

குறிப்பாக சமையல் செய்ய வந்திருக்கும் பெண்களை தொந்தரவு செய்து வருகிறார் என்று ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். மேலும் கடந்த சீசன்களில் புகழ் இருக்கிறார் என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள், இந்த சீசனில் அவருடைய நடவடிக்கையால் இந்த ஷோவை பார்ப்பதை தவிர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here