இங்கிலாந்து ராணி இங்க வந்தப்போ என்ன ஆச்சு தெரியுமா? குக் வித் கோமாளி நடுவரின் பகீர் பேட்டி!!

0
இங்கிலாந்து ராணி இங்க வந்தப்போ என்ன ஆச்சு தெரியுமா? குக் வித் கோமாளி நடுவரின் பகீர் பேட்டி!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவரான வெங்கடேஷ் பட், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தமிழகம் வந்த போது நடந்த சுவாரஸ்ய செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சுவாரஸ்ய செய்தி:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3 சீசன்களிலும், நடுவராக பணியாற்றியவர் செஃப் வெங்கடேஷ் பட். இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது, ஒரு சுவாரஸ்ய கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அண்மையில் மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், தமிழக சுற்றுப்பயணமாக சென்னை வந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவரை வரவேற்றார். அவருக்கு உணவு படைக்கும், கேட்டரிங் சர்வீஸ் ஆர்டர் தான், உட்பட 3 பங்கேற்ற குழுவுக்கு கிடைத்தது. இரவு 7:00 மணிக்கு சாப்பாடு கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில், திடீரென எங்கள் குழுவில் இடம் பெற்ற எக்ஸி யூடியூப் செஃப் நடராசன் அவர்களின் தாய் இறந்து விட்டதாக அவருக்கு போன் வந்தது. போன் வந்த சிறிது நேரம் கழித்து, மீண்டும் போன் செய்த நடராசன் தாய்க்கு செய்ய வேண்டியதை நீங்களே செய்து விடுங்கள்.

என்னால் இப்போதைக்கு வர முடியாது என உறுதியாக சொல்லிவிட்டார். தன் தாய்க்கு நடக்கும் இறுதிச் சடங்கில் கூட, பங்கேற்காமல் தான் மதித்த தொழிலிலும், கொடுக்கப்பட்ட வேலையையும் அர்ப்பணிப்போடு செய்தவர் தான் அந்த செஃப் என, அவர் குறித்து உருக்கமாக பேசினார். ராணியின் தமிழக பயணத்தின் போது நடந்த இந்த சுவாரசியம் குறித்து வெங்கடேஷ் பட் தெரிவித்த இந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here