சவரனுக்கு ரூ.120 வரை குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – ஏக குஷியில் நகைப்பிரியர்கள்!!

0

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.120 குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும், வார இறுதி நாட்கள் என்பதால் அதிக அளவிலான தாய்மார்கள் கடந்த இரண்டு நாட்களில் நகைகளை வாங்கி உள்ளனர். இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,920க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.4,740 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நேற்றைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.4,725க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் அதிகரித்து ரூ.60.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.60,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை அதிரடியாய் குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here