தனுஷை வைத்து டபுள் கேம் விளையாண்ட நடிகர் சிம்பு.., இணையத்தில் லீக் ஆன தகவல்!!

0
தனுஷை வைத்து டபுள் கேம் விளையாண்ட நடிகர் சிம்பு.., இணையத்தில் லீக் ஆன தகவல்!!
தனுஷை வைத்து டபுள் கேம் விளையாண்ட நடிகர் சிம்பு.., இணையத்தில் லீக் ஆன தகவல்!!

இந்திய சினிமாவில் பல வித்தியாசமான கதைகளில் நடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ். ஆனால் அவர் நடிப்பில் வெளியான குறிப்பிட்ட படங்களே வசூலை பெற்றிருக்கிறது. அந்த வகையில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்கள் ஏதுமின்றி ரசிகர்கள் மத்தியில் வெற்றி கண்டு வருகிறது.

வேற லெவல் தான்.. முக்கிய இயக்குனரின் பாராட்டை அள்ளிய திருச்சிற்றம்பலம் – என்ன சொல்லிருக்கார் பாருங்க!

மேலும் இந்த திரைப்படம், தற்போது வெளியாகிய படங்களில் விக்ரம் திரைப்படத்திற்கு அடுத்து திருச்சிற்றம்பலம் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் சக்ஸஸ் ஆனதற்கு முழு காரணம் நடிகர் சிம்பு தான் என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சிம்பு திருச்சிற்றம்பலம் படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தை குறித்து எந்தவித நெகட்டிவ் விமர்சனங்களை வெளியிடக்கூடாது என்று ரசிகர்களிடையே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் தான் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சிலர் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றியடைவதற்காக நடிகர் சிம்பு இப்படி டபுள் கேம் விளையாடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் நடிகர் தனுசுக்கு ஆதரவாக பேசி ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுள்ளார். இதனால் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாநாடு வெற்றியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here