மணிரத்னம் படத்தில் ‘குக் வித் கோமாளி’ அஷ்வினா?? வைரலாகும் புகைப்படம்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அஷ்வின் குமார். குறும்படங்களில் நடித்து வந்த அஷ்வின் முன்னதாக தமிழில் வெளியாகியுள்ள சில ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி அஷ்வின்

குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக மக்கள் மத்தியில் ரீசன்ட் சென்சேஷனலாக உருவாகியுள்ளவர் நடிகர் அஷ்வின் குமார். எந்த வித சினிமா பின்புலம் இல்லாத அஷ்வினுக்கு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காக சென்னை வந்த அஷ்வினுக்கு ஆரம்பத்தில் சினிமாவின் எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில் தான் காணப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனால் சில குறும்படங்களில் நடித்து வந்தார் அஷ்வின். அதில் ‘3 சீன்ஸ் இன் காதல்’, ‘காதல் ஒன்று கண்டேன்’ ஆகிய குறும்படங்கள் மக்கள் மத்தியில் கிளிக் ஆனது. தொடர்ந்து விஜய் டிவியின் ‘ரெட்டைவால் குருவி’, ‘நினைக்க தெரிந்த மனமே’ ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார் அஷ்வின். இருந்தாலும் சினிமா படங்களின் வாய்ப்பும், மக்களின் ஆதரவும் இவருக்கு கிடைக்கவில்லை.

சிறந்த குடும்ப விருதை தட்டிச்சென்ற பாரதி கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்!!

முன்னதாக நடிகர் அஷ்வின் குமார் சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில், துல்கர் சல்மானின் நண்பராகவும், அவரது ஆபீஸில் பணிபுரிபவராகவும் நடித்துள்ளார் அஷ்வின்.

தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பில் வெளியான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் நடிகர் துருவுக்கு அண்ணனாக நடித்துள்ளார் அஷ்வின். இந்த திரைப்படங்களில் கிடைத்திராத புகழும் பெயரும் நடிகர் அஷ்வினுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்துள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here