சிறந்த குடும்ப விருதை தட்டிச்சென்ற பாரதி கண்ணம்மா – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் இரண்டு தொடர்களின் மெகா சங்கமம் சிறப்பு எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சிறந்த குடும்பத்திற்காக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற குடும்பம் எது என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறப்பு தொடர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’ எபிசோடுகளின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சிறந்த குடும்பத்தை கண்டுபிடிக்கும் போட்டி ஒன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி குடும்பங்கள் பங்கு பெற்றுவருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தொடர்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த குடும்பத்தை தெரிவுசெய்ய உள்ளார்கள். முன்னதாக இந்த தொடரில் சிறப்பு விருந்தினராக பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி அர்ச்சனா கலந்து கொண்டார். தொடர்ந்து நடக்கவுள்ள என்டர்டைன்மெண்ட் சுற்றில் நடுவர்களாக பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கண்ணாடி போன்ற உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்த மாளவிகா – திணறிப்போன ரசிகர்கள்!!

இந்த ப்ரோமோ சில நாட்களுக்கு முன்னதாக வெளியானது. இந்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் ஆரி இந்த சீரியலில் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி ஆரி கலந்து கொண்ட படப்பிடிப்பு புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் வெளியானது.

அந்த வகையில் சீரியலில் நடைபெறும் போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை அறிவிப்பதற்காக நடிகர் ஆரி இந்த சிறப்பு தொடரில் கலந்து கொண்டுள்ளார். சிறந்த குடும்பத்திற்கான போட்டியில் ‘பாரதி கண்ணம்மா’ மற்றும் ‘ராஜா ராணி 2’ ஆகிய இரண்டு குடும்பங்களும் வெற்றி பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here